உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-21: கடைசி இரவுகளின் துவக்கம்

ரமலான் சிந்தனைகள்-21: கடைசி இரவுகளின் துவக்கம்

ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. லைலத்துல் கத்ர் எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, “எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,” என்றார்.“ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,” என்கிறார் . நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையார்.இதிலிருந்து ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது. நோன்பின் கடைசி பத்துநாட்கள் துவங்கி விட்டது. இந்நேரத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்தி இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !