வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!
புதுச்சேரி: புது பஸ் நிலையம் வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் நடந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட சிவனடிய õர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு சார்பில், 9ம் ஆண்டு சிறப்பு திருவாசக முற்÷ றாதல் மற்றும் ஞானபெரு வேள்வி விழா, புது பஸ் நிலையம் ஐயனார் கோவிலில் நடந்தது. காலை 8.00 மணிக்கு கயிலை இசைகருவிகள் முழங்க கொடிேயற்றம் நடந்தது. 8.30 மணிக்கு திருவாசகம் முற்றோதல் துவங்கியது. புதுச்சேரி, சென்னை, வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் பாடினர். தொடர்ந்து ஞான பெருவேள்வி நடந்தது. ஏற்பாடுகளை புதுச்சேரி நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு, வெள்ளந்தாங்கி ஐயனார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.