உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் குருபூஜை விழா

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் குருபூஜை விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் தேவஸ்தான டிரஸ்ட் சார்பில், ஆன்மிக இலக்கிய மன்றத்தின், 117 வது மாத நிகழ்ச்சியாக, திருவாடுதுறை முன்னாள் ஆதீனம் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகளின், ஐந்தாம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. கந்திகுப்பம் பைரவர் சுவாமிகளின் தலைமையில், கொடுமுடி சந்திரசேகர தேசிகர் மற்றும் குழுவினர் பூஜைகளை செய்தனர். விழாவையொட்டி நேற்று காலை, 9 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வருண கலச பூஜை, பஞ்ச சவுய பூஜை, சிவன் மற்றும் பார்வதி கலச பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து, தம்பிரான் சுவாமிகள் பூஜை செய்து வந்த சிவலிங்கத்திற்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் தம்பிரான் சுவாமிகள் படத்திற்கு அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !