உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

குளித்தலை: மேலமருதூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா கோலாலமாக நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலமருதூர் மகா மாரியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று காலை, 8 மணியளவில் மருதூர் காவேரியாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மாலை, 5 மணியளவில் மேட்டு மருதூர் கல்லுப்பாலத்தில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !