பார்வதீஸ்வர் கோவிலில் உலக நன்மை வேண்டி ருத்ர மகா யாகம்!
ADDED :3490 days ago
காரைக்கால்: உலக நன்மை வேண்டி காரைக்கால் பார்வதீஸ்வர் கோவிலில் ருத்ர மகா யாகம் நடந்தது. உலகில் அமைதி நிலவவும், மழை பொழிந்து பயிர்வளம் செழிக்கவும், காரைக்கால் திருத்தெளிச்சேரி சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரர் கோவிலில், ருத்ரைகாத சினீஜப ÷ ஹாமம் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7.௦௦ மணிக்கு சுவாமி அம்பாள் அனுக்ஞை, சங்கல்பம், ஏகாதச ருத்ர கலச பூஜை, மகன்யாச பாராயணம், ருத்ரபாராயணத்துடன் அபிஷேகங்கள் மற்றும் ஹோமம் நடந்தது. மதியம் 12.௦௦ மணிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் அறங்காவலர் தலைவர் காந்திராஜன், துணைத் தலைவர் ஆனந்தன் ,செயலாளர் நடேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்த்தஜாம வழிபாட்டு மன்றம் மற்றும் துர்கா வார வழிபாட்டு மன்றத்தினர் செய்தி ருந்தனர்.