ஸ்ரீவி., கோயிலில் திருத்தண்டி ஜீயர்
ADDED :3427 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்,:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வந்த ஆந்திரா திருத்தண்டி ஸ்ரீமத் நாராயண ஜீயர்சுவாமிகள் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தார். சுவாமிகளை மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மரியாதை செய்து வரவேற்றனர். ஆண்டாள் சன்னிதியில் அக்காரஅடைசல் சமர்பித்து, பக்தர்களுக்கு திருத்தண்டி ஜீயர் வழங்கினார். பின்னர் தங்கவிமானகோபுரம், வடபத்ரசயனர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். மணவாளமாமுனிகள் மடத்தில் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்.