உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர்,  காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய் தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில், அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நந் திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சாமி வீதியுலாவும் நடந்தது.  திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய் தனர். சாமி கோவில் உலாவும், மகா தீபாராதனையும் நடந்தது. நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராய ணசாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அர்ச்சகர் செல்வம் பூஜைகளை செய்தார். மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !