உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ரோப்கார் சேவை பாதிப்பு: வின்ச்க்கு பக்தர்கள் காத்திருப்பு

பழநியில் ரோப்கார் சேவை பாதிப்பு: வின்ச்க்கு பக்தர்கள் காத்திருப்பு

பழநி: பழநியில் பலத்தகாற்றால் அடிக்கடி ரோப்கார் நிறுத்தப்பட்டதால் ஞாயிறுவிடுமுறையில் குவிந்த பக்தர்கள் வின்ச்-ல் பயணம் செய்ய 3 மணிநேரம் காத்திருந்தனர். பழநிமலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக செல்ல ரோப்கார்ம், 8 நிமிடத்தில் செல்ல 3 வின்ச்-களும் நாள்தோறும் இயக்கப்படுகிறது. கடந்த சிலநாட்களாக பலத்த காற்று காரணமாக ரோப்கார் சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 40 கி.மீ.,வேகத்திற்கு மேலாக காற்றுவீசும்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. நேற்று ஞாயிறுபொது விடுமுறையை முன்னிட்டு ரோப்கார் மூலம் மலைக்கு செல்ல பக்தர்கள் குவிந்தனர். பலத்தகாற்று காரணமாக ரோப்கார் சேவை அடிக்கடி பாதிக்கப்பட்டதால் பக்தர்கள் வின்ச் மற்றும் படிப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதனால் வின்ச் ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !