கூனியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்சவ விழா
ADDED :3424 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே சிவகாமிபுரத்தில் உள்ள கூனியம்மன் கோயிலில் 30ம் ஆண்டு முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது. அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பால்குடம், காவடி, தீச்சட்டிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சிவகாமிபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.