உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கையம்மன் கோவிலில் ஆண்டவர் கருட சேவை திருவிழா

கெங்கையம்மன் கோவிலில் ஆண்டவர் கருட சேவை திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள ஆடையூர் கெங்கையம்மன் கோவிலில், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், ஆண்டவர் கருட சேவை திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. தொடர்ந்து மதியம், 2 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது விரதமிருந்த குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வேண்டுதல் நிறைவேற மடியேந்தி அன்னதானம் வாங்கி சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில், அடிஅண்ணாமலை, தேவனந்தல், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல், பெரியகுளம், கெங்கம்பட்டு, வேங்கிக்கால் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !