ராவதநல்லுாரில் ஆஞ்சநேய திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!
உத்திரமேரூர்: ராவதநல்லுாரில், ஆஞ்சநேய திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாபுரத்தில் கோவில் கொண்டிருந்த கல்யாண ஆஞ்சநேயருக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ராவதநல்லுாரில் புதியதாக ஆலயம் எழுப்பி, கடந்த பங்குனி மாதம், 12ம் தேதி, திருக்குட முழுக்கு நடந்தது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி மாதம் தசமி திதி பூரட்டாதி நட்சத்திரத்தில் அனுமத் ஜயந்தியும், ஆனி மாத முதல் வாரத்தில் ஸ்ரீசுவர்ச்சலா ஆஞ்சநேயருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். அதன்படி, இந்தாண்டிற்கான உற்சவம், 26ம் தேதி நடைபெற்றது. உற்சவத்திற்கு முன்னதாக மஹா ஸங்கல்பம், மாலை மாற்றுதல், ஊஞ்சல், ரஷாபந்தனம், வரப்ரேஷணம், கன்னிகாதானம், திருமங்கல்யதாரணம், மங்கல ஹாரத்தி ஆகிய நிகழ்ச்சிகளும், அதை தொடர்ந்து, தீர்த்தப்ரஸாதம் மற்றும் அன்னதானமும் அளிக்கப்பட்டது. விழாவில், ராவதநல்லுார் மற்றும் சுற்றிலும் உள்ள பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.