உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் ஒரு கோடி அர்ச்சனை நிறைவு

ராஜகணபதி கோவிலில் ஒரு கோடி அர்ச்சனை நிறைவு

அம்மாபேட்டை: ராஜகணபதி கோவிலில், உலக நன்மைக்காக ஒரு மாத காலமாக நடந்து வந்த கோடி அர்ச்சனை விழா, நேற்றுடன் நிறைவடைந்தது. சேலம், ராஜகணபதி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், கோடி அர்ச்சனை விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம், 9ம் தேதி துவங்கி, நேற்றுடன், அந்த விழா முடிந்தது. அதில், வேத பாடசாலை மாணவர்கள், சிவாச்சாரியார்கள் என, தினமும், 50 பேர் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர். தினமும், காலை, 6 மணி முதல், இரவு, 9 மணி வரை, மூன்று லட்சம் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. நேற்று காலை, 10.30 மணியுடன், ஒரு கோடி அர்ச்சனை முடிவு பெற்றது. அதற்கான நிறைவு விழா, வரும், 11ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 1,008 கலச அபி?ஷகம், ராஜகணபதிக்கு புஷ்ப அலங்காரம், 5,400 பேருக்கு பிரசாத வினியோகம், 21 ஆயிரம் பேர் பங்கேற்கும் சமபந்தி விருந்து, திரிசதி பாராயணம், சத்தாபரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !