அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு!
ADDED :3397 days ago
கும்மிடிப்பூண்டி: அம்மன் கோவில் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். கவரைப்பேட்டை அருகே, பெருவாயல் கிராமத்தில், சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், அந்த கோவிலின் முகப்பில் உள்ள கிரில் கேட் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.