உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 13ல் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 13ல் வருஷாபிஷேகம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயிலில் ஜூலை 13ல் வருஷாபிஷேகம் நடக்கிறது. திருச்செந்துாரில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலும், கும்பாபிஷேகம் நடந்த தினத்திலும் என, இரு வருஷாபிஷேகங்கள் நடக்கும். வரும் ஜூலை 13 ல் கும்பாபிஷேக தின வருஷாபிஷேகம் நடக்கவுள்ளது.அதிகாலை 5.00 மணிக்கு கோயில் நடை திறக்கப் படும். அதன் பின் கலசங்களுக்கு வேள்வி பூஜை காலை 6.00 மணிக்கு நடக்கும். காலை 9.00-10.00 மணிக்குள் மூலவர் வள்ளி, தெய்வானை, அம்பாள் ஆகிய சன்னிதி விமானங்களுக்கு போத்தி மார் மூலமும்,சண்முகர் சன்னிதி விமானத்திற்கு சிவாச்சாரியார் மூலமும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு பட்டாச்சாரியார் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது.அன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. இரவு குமர விடங்க பெருமான், வள்ளி அம்பாள், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !