வேத பாடசாலையில் சம்பூர்ண உற்சவம்
ADDED :3488 days ago
சோழவந்தான் அக்ரஹாரம் மலையாள கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சம்பூர்ண பாராயண உற்சவம் 15 நாட்களுக்கு நடந்தது. வரதராஜ் பண்டிட் தலைமையில் 50 பட்டர்கள் பங்கேற்று கணபதி ஹோமத்துடன் சம்பூர்ண உற்சவ பூஜையை துவக்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேத பாடசாலை நிர்வாக தலைவர் ஹரீஷ் சீனிவாசன், நிர்வாக மேலாளர் பாலசுப்பிரமணியம் செய்தனர்.