உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED :3406 days ago
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே சாலரப்பட்டியில் (அமராவதி வடிப்பாலை அருகில்), அமைந்துள்ளது உச்சிமாகாளியம்மன் கோவில். இக்கோவில் கும்பாபிேஷக விழா நேற்று காலை மங்கள இசையோடு தொடங்கியது. இன்று காலை, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, முதல்காலயாகபூஜை, நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 11ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும், கோ பூஜையும், காலை, 9:30 மணியிலிருந்து, 10: 30 மணிக்குள் கோவில் கும்பாபிேஷகமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்துள்ளனர்.