உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆறு மணி நேரம் மூடல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆறு மணி நேரம் மூடல்!

திருப்பதி: திருமலை ஏழு மலையான் கோவில், ஆறு மணிநேரம் மூடப்பட உள்ளது. திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, ஆனி வார ஆஸ்தானம், யுகாதி பண்டிகை, வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமைகளில், ஏழுமலையான் கருவறை முதல் கோவில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம். அதன்படி, ஜூலை, 16ம் தேதி, ஆனி வார ஆஸ்தானம் நிகழ்ச்சி நடக்க உள்ளதால், அதற்கு முன் வரும் செவ்வாய் கிழமை, அதாவது, 12ம் தேதி, ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, ஏழு மலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ’மதியம், 12:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்’ என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !