பலன் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!
ADDED :3420 days ago
ஐந்துமுகம் கொண்டவராக விளங்குபவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரை சனிக்கிழமை, அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு. இவரின் ஐந் துமுகங்களுக்கும் தனித்தனி நைவேத்யமும், தரிசனபலனும் உண்டு. வானரமுகம் கிழக்கு நோக்கியிருக்கும். இதற்கு வாழைப்பழம் படைத்து வழிபட்டால் மனத்துõய்மை உண்டாகும். தெற்குநோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகம் நைவேத்யம் செய்ய எதிரிகளின் தொல்லைநீங்கும். மேற்கு நோக்கிய கருடமுகத்திற்கு தேன் சமர்ப்பித்து வழிபட முன்செய்த தீவினை நீங்கும். வடக்கு நோக்கிய வராகமுகத்திற்கு சர்க்கரைப்பொங்கல் படைத்தால் செல்வவளம் பெருகும். மேல்நோக்கிய ஹயக்ரீவமுகத்திற்கு அவல் படைத்து வழிபட வாக்குவன்மை, ஞானம், நல்ல சந்ததி உண்டாகும்.