உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

சாயல்குடி: சாயல்குடி காமாட்சி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. காலை 7 மணியளவில் விநாயகர், கருப்பண்ணசுவாமி, பாலமுருகன், காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மூலவர்கள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரவ்ய ஹோமங்கள், கணபதி, மகாலட்சுமி யாக வேள்வியுடன் 108 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின்முறை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !