குருவித்துறையில் கசன் மீட்டெடுப்பு உற்சவம் விழா
குருவித்துறை: குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் குருபகவான் குமாரர் கசனை மீட்டெடுக்கும் உற்சவத்தில் பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில் ஆக.,2ல் நடக்கும் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை, பரிகார பூஜைகள் நடக்கிறது. இதைமுன்னிட்டு, இக்கோயிலில் நேற்று கசனை மீட்டெடுக்கும் உற்சவம் நடந்தது. அசுரகுரு சுக்ராச்சாரியார் வயிற்றில் இருந்த கசனை மிருதசஞ்சீவினி மந்திரத்தால் மீட்டு உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி மற்றும் அசுரகுருவின் மகள் தேவயானியால் கட்டுண்ட கசனை சக்கரத்தாழ்வார் மூலம் மீட்டெடுக்கப்படும் உற்சவவிழா நடந்தது. பட்டர்கள் ஸ்ரீதர், ரங்கநாதர் வேதபாராயணங்கள் முழங்க பூதேவி, ஸ்ரீதேவியருடன் பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்தி, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஞானசேகரன், நிர்வாக அதிகாரி விஸ்வநாத் செய்திருந்தனர்.