உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: காரமடை சின்னதொட்டிபாளையத்தில், அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரு ப்பணிகள் முடித்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த, 12ம் தேதி  யாக சாலை பிரவேசம் மற்றும் முதல்கால யாக பூஜைகளுடன் கும்பாபி÷ ஷக விழா துவங்கியது. 13ல் காலையில், 2ம் கால யாக பூஜை வேதபாராயணமும், மாலையில், மூன்றாம் யாக பூஜையும் நடந்தது. 14ம் தேதி காலை  3:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், யாத்ராதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. புனித தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து  வந்து, மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் அமிர்த வர்ஷினி அம்மன் கோவில் கோபுர கலசம் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி கோபுர  கலசங்களுக்கும், புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஞானசுவாமிநாத பண்டிதர் மற்றும் சிவாச்சாரியர் ஆகியோர் கும்பாபி÷ ஷகத்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !