ஆலாந்துறை ராகு – கேது கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3400 days ago
கோவை: ஆலாந்துறையில் உள்ள, ராகு கேது கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கொங்கு மண்டலத்தின் ராகு கேது ஸ்தலமாக போற்றப் படும், கோவை சிறுவாணி ரோட்டில் உள்ள, நாகசக்தி மையத்தில், 27 நட்சத்திர விருட்சங்கள் அமைந்துள்ள, தனிசன்னதியில் அமைந்துள்ளது, ராகு கேது பகவான்களின் கோவில். கோவில் வளாகத்தில் வலம்புரி விநாயகர், கருப்பராயசுவாமி சன்னதிகளில் மராமத்து பணி முடிந்து, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 9:15 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது; கோவை ஸ்ரீராம் சி வாச்சாரியார் தலைமையில், பழநி, வில்வக்குடில் குருமுனி சுவாமிகள் முன்னிலையில், 18 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.