உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூண்டிமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

பூண்டிமாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

உத்திரமேரூர்: கம்மாளம் பூண்டியில் மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா, கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, தினசரி அப்பகுதி கிராம தேவதை மற்றும் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். அப்போது, விரதம் இருந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, அலகு குத்தியும், பெண் பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்தும் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம், 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், அப்பகுதியை சுற்றி உள்ள கிராமவாசிகள் பங்கேற்று, மாரியம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !