உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழநி: பழநி சிவன்கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷவேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர்,உமாமகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. இதைப்போலவே சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, திருஆவினன்குடிகோயில், புதுநகர் சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பால்,பழங்கள், பொங்கல், சர்க்கரை பொரிகடலை அபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !