அனுமந்த வாகனத்தில் சேதுநாராயணப்பெருமாள் உலா!
ADDED :3373 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா ஜூலை 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றவருகிறது. விழாவில் பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி இன்று( ஜூலை 18ல்) அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.