உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா யோகா மையத்தில் குருபௌர்ணமி கொண்டாட்டங்கள்!

ஈஷா யோகா மையத்தில் குருபௌர்ணமி கொண்டாட்டங்கள்!

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா இன்று (ஜூலை 19) கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரகணக்கானமக்கள் ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்து, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர். மாலை ஆதியோகி ஆலயத்தில் நிகழும் கலை நிகழ்ச்சி மற்றும் சத்குருவின் அருளுரை மற்றும்தியானம் நடைபெற உள்ளது. தட்சினாயணத்திற்கு பிறகு முதல் பௌர்ணமியாக வரும் இந்த நாளில்தான், ஆதியோகியாக இருந்த சிவன் ஆதிகுருவாக மாறி, தென்திசை நோக்கி அமர்ந்து, சப்தரிஷிகளான தனது 7 சீடர்களுக்கும் முதன்முதலாக ஞானத்தை வழங்கி அருளினார். இயற்கையில், இந்நாளிலிருந்து உத்தராயணம் வரையிலான அடுத்த 6 மாதங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையை மேம்படுத்துவதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் உகந்த காலமாக உள்ளது. நமது நன்றியை குருவிற்கு சமர்பிக்கும் ஒரு வாய்ப்பாக, வருகின்ற ஜுலை 19ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் நிகழும் இந்த குரு பௌர்ணமி கொண்டாட்டங்கள் அமைகின்றன. அன்று தியானலிங்கத்தில் பால் மற்றும் நீர் அபிஷேகம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைநடைபெறும். கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்விற்கு நேரில் வர இயலாதவர்கள் நிகழ்ச்சி முழுவதையும்DDபொதிகை தொலைக்காட்சியில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவுவரை நேரடி ஒளிப்பரப்பில் காணலாம். தொடர்புக்கு- 9442515254


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !