உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

வடாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

திருவாலங்காடு;வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அன்னதான கூடத்தை, முதல்வர் காணொளி காட்சி மூலம் நேற்று, திறந்து வைத்தார். திருத்தணி முருகன் துணை கோவிலான, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில், தினமும், 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு போதிய கட்டட வசதியில்லாததால், கோவில் வளாகத்தில் உள்ள அலுவலக மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, புதிய அன்னதான கூடம் கட்ட தீர்மானித்து, கோவில் நிர்வாகம், கோவில் நிதியில் இருந்து, 63 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தது. கோவில் வளாகத்தில், புதிய அன்னதான கூடம், ஆறு மாதங்களுக்கு முன், கட்டும் பணி துவங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, சென்னை கோட்டையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் அன்னதான கூடத்தை திறந்து வைத்தார்.இங்கு, 100 பக்தர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன், மேலாளர் பழனி, பொறியாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !