உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா துவக்கம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா துவக்கம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா இன்று இரவு,பூச்சாட்டுடன் துவங்குகிறது.  விழாவை அடுத்து, 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு லட்சார்ச்சனையும், 23ல் இரவு கிராம சாந்தியும், 24ல் கொடியேற்றமும், மாலை,  6:00 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 26ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு அம்மன் அழைப்பும், காலை, 6:00  மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும், 27ல் காலை, மாவிளக்கும், மாலை பூ பல்லக்கில் அம்மன் திருவீதி  உலாவும், 28ல் இரவு பரிவேட்டை, வாண வேடிக்கையும், 29ல் மதியம் மகா அபிஷேகமும், மாலையில் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.  ஆக., 1ம் தேதி காலை, 108 குத்து விளக்கு பூஜையும், 2ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு  விழாவும், காலை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா  மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !