பணம்...பணம் என்று ஏன் இப்படி அலைகிறீர்கள்?
ADDED :3766 days ago
பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மக்களில் ஒரு பகுதியினர் தயாராகி விட்டனர். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் ஆகியவற்றின் பெயரால் அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கின்றனர். பணம் இருந்தால் எல்லாம் நடந்து விடும் என்று நினைக்கிறார்கள். பணக்காரர்களின் வாழ்க்கையைப் பார்த்து, அதில் மயங்கி, தாங்களும் பணத்துடன் வாழ துடிக்கிறார்கள். படித்தவர்கள் கூட சம்பாதிக்கும் பணத்தில், மார்க்க விதிகளுக்கு மாறாக, குடி, விபச்சாரம் போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கம்ப்யூட்டர் கல்விய சீரழிவு சாதனமாக மாற்றிக் கொள்கிறார்கள். இறுதியில் பல நோய்களுக்கு ஆளானபிறகு, இறைவா! என்னைச் சோதித்து விட்டாயே என்று கதறுகிறார்கள்.