உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பணசாமி கோயிலில் கிடா விருந்து

கருப்பணசாமி கோயிலில் கிடா விருந்து

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே உள்ள கருப்பணசாமி-கன்னிமார் கோயிலில் 25 கிடாக்கள் பலியிடப்பட்டு, விருந்து படைக்கப்பட்டது. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூசாரிப்படி ஊராட்சி, திருமலைகவுண்டன் வலசு கிராமத்தில் கருப்பணசாமி-கன்னிமார் கோயில் உள்ளது. கோரிக்கைகள் நிறைவேறினால், நேர்த்திக் கடனாக கிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்வர். பின், நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல்வாரத்தில் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு, ஊர் பொதுமக்கள் சார்பில் விருந்து நடைபெறும். இதில் அக்கம்பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் திரளாக பங்கு பெறுவர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை விருந்து நடக்கும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று நடந்தது. இதில் 25 கிடாக்கள் பலியிடப்பட்டு விருந்து நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருமலைகவுண்டன்வலசு கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !