உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரும்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை செடல்

கரும்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை செடல்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கரும்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் உற்சவம் நாளை நடக்கிறது. உற்சவத்தையொட்டி, கடந்த  18ம் தேதி காலை 4:30 மணி முதல் 6:00 மணிவரை கொடியேற்று விழா நடந்தது. நாளை (22ம் தேதி) காலை 6:00 மணிக்குமேல் 7:30 மணிக்குள்  ஸ்ரீரேணுகாம்பாள் மைதக்னி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு சக்தி கரகம், 1:00 மணிக்கு சாகைவார்த்தல்,  மாலை 4:30  மணிக்கு செடல் உற்சவம், மாலை 6:00 மணிக்கு பூங்கரகம் உற்சவம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு முத்துமாரியம்மன் முத்துபல்லக்கில் தெப்பல்  உற்சவம் நடக்கிறது. இரவு உற்சவர் அம்மன், விநாயகர், வீரபத்திரர் சுவாமி வீதியுலாவும், 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !