கிரிவல பாதை சீர் செய்ய பக்தர்கள் வேண்டுகோள்
பவானி: ஊராட்சிக்கோட்டை, வேதகிரி மலையின் கிரிவல பாதையை சீர் செய்ய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பவானி, ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை, தொட்டியபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. மலை மேல் வேதநாயகி உடனமர் வேதகிரி ஈஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வரதராஜபெருமாள் மற்றும் ரங்கநாதன் முதலான சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இந்த மலைக் கோவிலை, பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் நிர்வகிக்கின்றனர். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று, பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், மலையை சுற்றியுள்ள ஜீவா நகர், வேதகிரிபுரம், எம்.ஜி.ஆர்., நகர், அண்ணாநகர், ஊராட்சிக்கோட்டை உட்பட, நான்கு கி.மீ., நடந்து கிரிவலம் செல்கின்றனர். இந்த பாதையில், வேதகிரிமலை மற்றும் பாரிஜாதமலை ஆகிய இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் கனுவாகாடு வீதி சாலை, மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த வழியாக சாக்கடை நீர் வழிந்து ஓடுகிறது. இங்கு போதிய மின்விளக்கு வசதியும் இல்லை. இவற்றை சரி செய்ய, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.