பவானியம்மன் கோவிலில் பக்தரின் 6 சவரன் மாயம்
ADDED :3474 days ago
பெரியபாளையம்: பவானியம்மன் கோவிலுக்கு வந்திருந்த, பெண் பக்தர் அணிந்திருந்த ஆறு சவரன் செயின் மாயமானது.பெரியபாளையம், பவானியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கோவில் வளாகத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதில், நகரி அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா, 64, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, வேப்பிலை சேலை அணிந்து வலம் வந்தார். பின், ஆடை மாற்றும் போது அவர் அணிந்திருந்த ஆறு சவரன் செயின் காணாமல் போனதை கண்டார். இதுகுறித்த புகாரையடுத்து, பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.