ராஜயோகம் தருபவர்!
ADDED :3759 days ago
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குரு பகவான் தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஒரு பிரளய காலத்தில் உலகமே அழிந்த போது, இங்கிருந்த ஒரு மேடான பகுதியில் சிவபெருமான், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். திட்டை என்றால் மேடு’. இங்குள்ள உலகாம்பிகை சன்னிதிக்கு வலதுபுறத்தில் குரு பகவானுக்கு சன்னிதி உள்ளது. இவர், ராஜ யோகம் தருபவர் என்பதால் ராஜகுரு’ எனப்படுகிறார். கிரகங்களில் குரு பகவானே திருமண, புத்திர பாக்கியம், செல்வம் தரும் தனகாரகராக விளங்குகிறார். எனவே தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கிடைக்க இவரிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். தொலைபேசி: 04362 – 252 858.