மேற்கு நோக்கி அமர்ந்தவர்!
ADDED :3759 days ago
குரு பகவான் நவக்கிரக மேடையில் வடக்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தியாக தெற்கு நோக்கியும் இருப்பதே வழக்கம். ஆனால் சென்னை பாடியில் (திருவலிதாயம்) உள்ள வலிதாயநாதர் கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவர் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க இத்தலத்திலுள்ள சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன் அவருக்கு சாப விமோசனம் தந்தார். இந்த குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் விதமாக மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. கிரக தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார் பாம்பன் சுவாமிகளால் பாடல் பெற்ற இத்தலத்தைச் சுற்றி 11 தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இருப்பது சிறப்பு. தொலைபேசி: 044 – 2654 0706.