கல்வி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :3402 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் உள்ள கல்வி விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ., வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் கோவில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. முன்னதாக காலை 11:00 மணி முதல் சிறப்பு யாக சாலை பூ ஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. பின்னர், கல்வி விநாயகருக்கு மண்டல பூஜைகள் நடந்தது. இதில் பழனிவேலு ஐ.டி.ஐ., நிர்வாகி ராஜேந்திரன், விருத்தகிரி அறக்கட்டளைத் தலைவர் ஜெயராமன், தேன்மொழி ராஜேந்திரன், முதல்வர் சத்தியராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.