உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் நாளை துவக்கம்

சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் நாளை துவக்கம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் நாளை துவ ங்குகிறது. விழாவை முன்னிட்டு, நாளை (29ம் தேதி) மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, புண்யாவாசனம், மிருத்ஸங்கிரணம், அ ங்குரார்பணம், வாஸ்துசாந்தி, ஆராதனம், பஞ்சகவ்ய பிரதிஷ்டை, பவித்ர சயனாதிவாசம், பிரதான ஹோமம், இரவு 9:00 மணிக்கு, பூர்ணாஹுதி,  வேதபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. வரும் 30ம் தேதி, காலை 7:00 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், 9:00 மணிக்கு,  உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், பவித்ரம் ஐப்யம், 10:30 மணிக்கு மேல், பெருமாள், தாயார், சயனநரசிம்மர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு  பவித்ரம் சாற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து,  2:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு, உற்சவர்  உபயநாச்சியாருடன் உள்புறப்பாடும், மாலை 6:30 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், இரவு 8:30 மணிக்கு, பூ ர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை 7:00 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், 9:00  மணிக்கு, அஷ்டோத்தர சத 108 கலச திருமஞ்சனம், 11:30 மணிக்கு, மகாபூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 6:30  மணிக்கு, உற்சவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !