திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி விழாக்கள்!
ADDED :3402 days ago
திருப்பரங்குன்றம், :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.ஜூலை 31 மகா பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. ஆக.,2ல் குருபெயர்ச்சியை முன்னிட்டு, தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆக.,5ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தெய்வானை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.,12ல் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும், ஆக.,15ல் பிரதோஷமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.