பெரியபாளையத்தம்மனுக்கு ஆகஸ்ட் 5ல் பாலாபிஷேகம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பெரியபாளையத்தம்மனுக்கு, ஆகஸ்ட் 5ம் தேதி, பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. வெள்ளவேடு அடுத்த, புதுச்சத்திரத்தில் உள்ளது பெரியபாளையத்தம்மன் கோவில். இங்கு, ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, அன்று, காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பின், கொரட்டூர் கிராமத்தில் உள்ள பாலீஸ்வரர் கோவிலிலிருந்து, காலை 9:30 மணிக்கு, பால்குடம் புறப்பட்டு, பொன்னியம்மன் கோவில் வழியாக, புதுச்சத்திரத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலை வந்தடையும். அங்கு, பகல் 12:30 மணிக்கு, அம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், அம்மன் வீதிஉலா நடைபெறும். தொடர்ந்து, 7ம் தேதி, காலை 10:00 மணிக்கு, திருமஞ்சள் நீராட்டும், சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.