உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமப்பட்டி மாரியம்மன் கோவில் சங்கு அபிஷேகம்

எருமப்பட்டி மாரியம்மன் கோவில் சங்கு அபிஷேகம்

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, மாரியம்மன் கோவிலில் சங்கு அபிஷேகம் நடந்தது. எருமப்பட்டி அடுத்த, தூசூர் பஞ்சாயத்து மாரியம்மன் கோவிலில், சங்கு அபிஷேகம் நடந்தது. கடந்த, 48 நாட்களுக்கு முன், தூசூர் மாரியம்மன் கோவிலில், ஜீர்ணோதாரன கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்து வந்தன. நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு சிறப்பு சங்கு பூஜைகள் செய்யப்பட்டன. காலை, 10 மணி முதல் மதியம், 3 மணி வரை, திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். மண்டல அபிஷேகம் நிறைவு பெற்றதால், பொங்கல் வைத்தலும், கிடாவெட்டு நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !