பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 56.68 லட்சம்
ADDED :3403 days ago
சத்தி: சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல்கள், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த், கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, சத்தி சரக ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில், நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் உண்டியல் தொகை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் மொத்தம், 56 லட்சத்து, 67 ஆயிரத்து, 974 ரூபாய், 367 கிராம் தங்கம், 781 கிராம் வெள்ளி இருந்தது.