உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னிவீரன் பொன்னியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

அக்னிவீரன் பொன்னியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு வட தலைக்குளம் அக்னிவீரன் பொன்னியம்மன் கோவில் ஆடி மாத 2ம் வெள்ளியை  முன்னிட்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவிய விஷேச ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை  நடந்தது. தொடர்ந்து, மூலவர் பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பூஜைகளை வெங்கடேச தீட்சிதர் குழுவினர் செய் தனர். ஹோமத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !