ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா:ஆக. 4ல் மவுலீது தொடக்கம்
கீழக்கரை: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா ஆக.,4ல் மவுலீது எனப்படும் புகழ்மாலையுடன் துவங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. 842ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஆக., 4 மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.ஆக., 13 மாலை 5 மணிக்கு அடிமரம் ஊன்றும் நிகழ்ச்சியும், 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு கொடி ஊர்வலம், 5.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஆக., 26(வெள்ளி) மாலை 4 மணி முதல் சந்தனக்கூடு விழாவும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கிறது. செப்., 3ல் கொடியிறக்கம் செய்யப்படும். மத நல்லிணக்க எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்பர். ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.