குன்றத்து கோயில்களில் நாளை குருபெயர்ச்சி
ADDED :3401 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நாளை(ஆக.,2) குருபெயர்ச்சி சிறப்பு யாகம், பூஜைகள் நடக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காலை 8.00 மணிக்கு யாகசாலை பூஜை, அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து சிறப்பு பூகைள் நடக்கிறது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயில் மற்றும் விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காலை 10.30 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கும், திருநகர் சுந்தர் நகர் வெற்றி விநாயகர் கோயிலில் மாலை 5.00 மணிக்கு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கும், பாலாஜிநகர் சர்வ சித்தி விநாயகர் கோயிலில் காலை 8.55 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.