குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து ருத்ராட்சம் அணிவிக்கலாம்?
ADDED :3752 days ago
பொதுவாக ஜபம் செய்வது, ருத்ராட்சம் அணிவது, விரதமிருப்பது போன்ற எல்லாமே இவற்றைப்பற்றி புரிந்து கொண்டு செய்தால் தான் நல்லது. எனவே முதலில் இவற்றைப் பற்றிய விஷயங்களை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். அவர்களுக்கு இயல்பாக அதில் ஆர்வம் வர வேண்டும். எனினும் ஆறு வயதிலிருந்து ருத்ராட்சம் அணிவிக்கலாம்.