உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்திக்கு நன்மை, தீமை தெரிந்தும் மனம் தீமையை தேர்ந்தெடுக்கிறதே ஏன்?

புத்திக்கு நன்மை, தீமை தெரிந்தும் மனம் தீமையை தேர்ந்தெடுக்கிறதே ஏன்?

புத்தி வேறு மனம் வேறு என்பதைப் புரிந்து கொண்டதே பெரிய விஷயம். மனிதனின் சிந்தனை செயல்பாடுகளை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்காகப் பிரிப்பர். ஆசைப்பட மட்டுமே மனதிற்குத் தெரியும். அடுத்ததாக சித்தம் வேலையைத் துவங்கும். ஆசைப்பட்டது சரியா தவறா என அதுவே சீர் துõக்கி ஆராயும். மூன்றாவதாக புத்தி தீர்மானிக்கும். இது நல்லது, செய்யலாம் என்றோ இது தீயது, செய்யக்கூடாது என்று நிச்சயித்து மனதுக்கு தெரியப்படுத்தும். மனம், அகங்காரம் என்பதன் மூலம் செயல்படுத்தும். இது ஒரு அடிப்படை விஷயம். மனோபலம், புத்திபலம் என்ற நிலையில் தான் நல்லதும், தீதும் செயல்படுத்தப்படுகின்றன. அதாவது ஆசையால் மனம் பேதலிக்கும் போது, புத்தி அதை அடக்க வேண்டும். ஆனால் அந்த புத்தியே பலவீனப்படும் போது தான், மனம் தீமையைத் தேர்ந்தெடுக்கிறது. இதிலிருந்து மீள இறையருளைத் தவிர வேறு வழியில்லை. என் அறிவு பலவீனப்படும் போது இறைவன் அறிவைத் துõண்டி என்னைத் தவறு செய்யாமல் காப்பாற்ற வேண்டும் என காயத்ரி மந்திரம் உணர்த்துகிறது. எனவே சுவாமியிடம் என் புத்தியில் இருந்து பலப்படுத்து என்றும், மனதை புத்திக்கு கட்டுப்பட்டு தவறு செய்யாமல் பாதுகாப்பு கொடு என்றும் வேண்டுவது அவசியம். பக்தியாலும், நல்ல நூல்களைப் படிப்பதாலும் அறிவு செம்மைப்பட்டு விட்டால் மனம் நல்வழியில் நம்மை அழைத்துச் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !