காயநிர்மலேஸ்வரர் கோவிலில் விபூதி அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி!
ADDED :3401 days ago
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் தீபாராதனை காட்டும் போது அந்த தீபத்தின் ஒளி கண்ணாடிபோல் லிங்கத் திருமேனியில் எதிரொளிப்பதைக் பார்க்கலாம், வசிஷ்டருக்கு ஜோதிவடிவாகக் காட்சியளித்ததால் இத்தலத்தினை அக்னி ஸ்தலம் என்கிறார்கள். இத்தலத்தில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் விபூதி அலங்காரத்தில், தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.