மேகாலயா கவர்னர் திருநள்ளாரில் சாமி தரிசனம்
ADDED :3401 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மேகாலயா கவர்னர் சண்முகநாதன் சாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மேகாலயா,மணிப்பூர் மாநிலங்களின் கவர்னர் சண்முகநாதன் சாமி தரிசனம் செய்தார். இவரை சார்பு ஆட்சியர் கேசவன், தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோவிலில் சொர்ண கணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டார். நாட்டின் நலனுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் எள்தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட்டார். கவர்னருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.