உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜிலிம்பாறையில் குருபெயர்ச்சி மகா யாகம்

குஜிலிம்பாறையில் குருபெயர்ச்சி மகா யாகம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் உள்ள அங்காள ஈஸ்வரி, வரகரம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், உலக மக்கள் நன்மைக்காகவும் 365 யாக குண்டங்கள் வைக்கப்பட்டு, மகா குருபெயர்ச்சி வேள்வி விழா கெண்டாட்டம் நடந்தது. 1008 புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு, 12  ராசிக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் சர்வ தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வேடசந்துõரில் உள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில், குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது. குரு பெயர்ச்சி மற்றும் ஆடி 18 விசேஷ தினம் என்பதால், சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !