சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3496 days ago
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு உற்சவர் அம்மனை, வசந்த மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர். தர்மகர்த்தா பாஞ்சாலை, கோவிந்தசாமி, கண்ணன், பூசாரிகள் குமார், தமிழ்செல்வன், சங்கர், நாராயணன், சுரேஷ் பூஜைகளை செய்தனர்.